2017-09-20 16:03:00

மெக்சிகோ நிலநடுக்கம் – உதவி கோரி ஆயர்களின் அறிக்கை


செப்.20,2017. செப்டம்பர் 19, இச்செவ்வாயன்று மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய, அந்நாட்டு ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.1 என்ற சக்தி கொண்ட இந்த நிலநடுக்கத்தால், Morelos, Tlaxcala, Puebla, Guerrero, Oaxaca, மற்றும் மெக்சிகோ பெரு நகரம் பாதிக்கப்பட்டதாக ஆயர்களின் அறிக்கை தெரிவிக்கிறது.

செப்டம்பர் 7ம் தேதி, 8.2 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மெக்சிகோவைத் தாக்கிய சில நாட்களில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆயர்களின் விண்ணப்பம், அனைத்து மக்களும் கரம் கோர்த்து, பணியாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

குவாதலூப்பே அன்னை மரியா, மெக்சிகோ மக்களைக் காக்கவேண்டும் என்றும், இடிபாடுகளிலிருந்து மீண்டு எழும் சக்தியை மக்களுக்குத் தரவேண்டும் என்றும், ஆயர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.