2017-09-20 15:56:00

மத்திய ஆப்ரிக்க குடியரசு குறித்த கூட்டத்தில் பேராயர் காலகர்


செப்.20,2017. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், பொதுமக்கள் பலரது மரணங்களுக்கு காரணமாக அமைந்துள்ள மோதல்கள் குறித்து திருப்பீடம் மிகுந்த கவலை கொண்டுள்ளது என்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசைக் குறித்து, ஐ.நா. பொது அவையில் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் பங்கேற்ற பேராயர் காலகர் அவர்கள், அந்நாட்டில் நிகழும் மோதல்களால் மக்கள் அடையும் துயரங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் புலம்பெயர்தல் குறித்தும், திருப்பீடம் கவலை கொண்டுள்ளது என்று எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, மத்திய ஆப்ரிக்க குடியரசின் பாங்கி நகருக்குச் சென்றபோது ஆற்றிய உரையில், மக்களுக்கு வழங்கப்படும் மாண்பு, நன்னெறியைச் சார்ந்தது என்று கூறியதை, பேராயர் காலகர் இக்கூட்டத்தில் நினைவுறுத்தினார்.

அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம், குடியுரிமை ஆகிய இலக்குகளை மத்திய ஆப்ரிக்க குடியரசில் நிலைநாட்ட, அகில உலக சமுதாயம் உதவி செய்யவேண்டும் என்று பேராயர் காலகர் அவர்கள் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.