2017-08-30 16:08:00

கொலம்பியா நாட்டிற்குச் செல்லும் 3வது திருத்தந்தையாக...


ஆக.30,2017. செப்டம்பர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை கொலம்பியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கு செல்லும் மூன்றாவது திருத்தந்தை என்று, “Il Sismografo” என்ற வலைத்தள செய்தித்தாளின் ஆசிரியர் லூயிஸ் பதில்லா (Luis Badilla) அவர்கள் கூறியுள்ளார்.

1968ம் ஆண்டு, திருத்தந்தை அருளாளர் ஆறாம் பால் அவர்களும், 1986ம் ஆண்டு திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களும் கொலம்பியா நாட்டில் திருத்தூதுப் பயணங்கள் மேற்கொண்டனர்.

திருத்தந்தை அருளாளர் ஆறாம் பால் அவர்கள் மேற்கொண்ட 3 நாள் பயணத்தில், கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் மட்டுமே தன் சந்திப்புக்களை நடத்தினார். திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் மேற்கொண்ட 8 நாள் பயணத்தில், 12 இடங்களுக்குச் சென்றார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தில், Bogota, Rio Negro/Medellin, Cartagena, Villavicencio ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வுகளிலும், வழிபாட்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார்.

கொலம்பியாவில் மறைசாட்சிகளாக உயிர் துறந்த ஆயர் Jesus Emilio Jaramillo Monsalve அவர்களையும், அருள்பணி Pedro Maria Ramirez Ramos அவர்களையும், செப்டம்பர் 8ம் தேதி, Villavicencio எனுமிடத்தில் நடைபெறும் திருப்பலியில், அருளாளர்களாக உயர்த்துகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.