2017-08-22 15:14:00

கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நினைவில் வைக்க..


ஆக.22,2017. நம் வாழ்வில் கவலைமிகுந்த நேரங்களில், கடவுள் நம்மைக் கைவிடவே மாட்டார் என்ற உணர்வு நம்மில் மேலோங்கி இருக்கவேண்டுமென்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “கவலையாக இருக்கும்போது, எல்லாமே தவறாக நடக்கின்றன என உணரும்போது, ‘கடவுள் என்னை அன்புகூர்கிறார், கடவுள் என்னை ஒருபோதும் கைவிடுவதில்லை’ என்பதை நாம் கட்டாயம் நினைவில் வைக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை, அயர்லாந்து நாட்டின் டப்ளினில் நடைபெறவிருக்கும் 9வது உலக குடும்பங்கள் மாநாட்டின் நிகழ்ச்சிகள் பற்றி, செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டுள்ளார், பேராயர்  Diarmuid Martin.

அயர்லாந்தின் Knock அன்னை மரியா திருத்தலத்தில், இத்திங்களன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய பேராயர் Martin அவர்கள், வருகிற ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி அயர்லாந்தின் அனைத்து மறைமாவட்டங்களிலும் இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வும், 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாநாடும், 25ம் தேதி குடும்பங்களின் விழாவும், 26ம் தேதி நிறைவு நிகழ்வும் நடைபெறும் என அறிவித்தார்.

‘குடும்பத்தின் நற்செய்தி : உலகிற்கு மகிழ்ச்சி’ என்ற தலைப்பில், 9வது உலக குடும்பங்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.