2017-08-15 16:17:00

பழங்குடியின மக்களுக்காக போராடும் பொலிவியா திருஅவை


ஆக.,15,2017. இந்நாள்வரை சட்டம் வழியாக பாதுகாக்கப்பட்டுவந்த, பொலிவிய பழங்குடியின மக்களின் நிலங்களில், முன்னேற்றம் என்ற பெயரில், குறுக்குச் சாலைகள் அமைக்க, அரசு முயன்று வருவது குறித்து, தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்,  பொலிவிய ஆயர்கள்.

1990ம் ஆண்டு முதல் பொலிவியாவின் டிப்னிஸ் (Tipnis) பகுதியில், சட்டம் வழியாக பாதுகாக்கப்பட்டுவரும் 12,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலத்தின் குறுக்கே, வளர்ச்சி என்ற பெயரில் சாலை ஒன்றை அமைக்க முயன்று வருகிறது, பொலிவிய அரசு.

பழங்குடியின மக்களின் எதிர்ப்புக் குரல்களோடு தங்களையும் இணைத்துள்ள தல திருஅவை அதிகாரிகள், இந்த சாலையால் ஏற்படும் முன்னேற்றத்தைவிட, இதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் அழிவு அதிகம் என கூறியுள்ளனர்.

டிப்னிஸ் பகுதியில் வாழும் பழங்குடியின சமுதாயம் பலனடையும் நோக்குடன், விவசாய தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றை துவக்கி, இச்சமுதாயத்தின் 80 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது, பொலிவிய திரு அவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.