2017-08-14 16:52:00

அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து வெனிசுவேலா ஆயர்கள்


ஆக.,14,2017. வெனிசுவேலா அரசின் கொள்கைகளை எதிர்ப்போர், சிறைகளில் மனிதாபிமானமற்ற முறையில் கொடுமையாக நடத்தப்படுவதாக தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

அரசின் கொள்கைகளை எதிர்ப்போர் மீது மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாக உரைக்கும் வெனிசுவேலா ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை, வெனிசுவேலாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போருக்கு, போதிய மருத்துவ வசதிகளின்மை, வழக்குரைஞர்களையும் உறவினர்களையும் சந்திக்க அனுமதி மறுக்கப்படல்,  போதிய உணவு வழங்கப்படாமை போன்ற நிலைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள், அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் கூறும், ஆயர்களின் நீதி மற்றும் அமைதி அவை, தடுப்புக்காவல் இடங்கள் சுகாதாரமற்றவைகளாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.