2017-08-08 15:39:00

இந்திய அருள்சகோதரிக்கு உலகளாவிய HIV/AIDS விருது


ஆக.08,2017. AIDS நோயுற்றோரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், ஒரு சிறப்பு பாடத்திட்டத்தை அமைத்துள்ள, இந்திய அருள்சகோதரி ஒருவருக்கு, உலகளாவிய HIV நோயுற்றோர் பராமரிப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு மரி யோசேப்பு சபையின் பெங்களூரு மாநிலத்தைச் சார்ந்த அருள்சகோதரி Lourdu Mary Nagothu அவர்கள், HIV மற்றும், AIDS நோயுற்றோரின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு அறிமுகப்படுத்தியுள்ள பாடத்திட்டத்திற்காக இவ்விருது வழங்கபபடுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் மாநிலத்தின் டல்லஸ் நகரில், AIDS நோயுற்றோர் பராமரிப்பு செவிலியர் கழகம் (ANAC)  நடத்தும் ஆண்டுக் கூட்டத்தில், வருகிற 4ம் தேதியன்று இவ்விருது வழங்கப்படும்.

அருள்சகோதரி Nagothu அவர்கள், மகாராஷ்டிர மாநிலத்தின் Bel-Air மருத்துவமனையில் செவிலியரின் இயக்குனராகவும், Panchgani செவிலியர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.