2017-08-04 15:23:00

சிரியா புலம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்திற்கு உலகளாவிய திட்டம்


ஆக.04,2017. லெபனான் நாட்டிலுள்ள சிரியா நாட்டு புலம்பெயர்ந்த மக்களை, மீண்டும் சிரியாவுக்குள் குடியமர்த்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையில், உலகளாவிய திட்டத்தைப் பின்பற்றுமாறு, லெபனான் நாட்டிலுள்ள பொது நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளனர், மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள்.

லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள் நடத்திய ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில், இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு  வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிரியா நாட்டு புலம்பெயர்ந்த மக்களை, சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையில், புலம்பெயர்ந்தவர் குறித்த உலகளாவிய திட்டத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், லெபனன் நாட்டிற்கு அது பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்று, அவ்வறிக்கை எச்சரிக்கின்றது. 

சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்த மக்களை, அந்நாட்டிற்குப் பாதுகாப்பாக அனுப்பும் நடவடிக்கைக்குத் தடையாய் இருக்கும் பல்வேறு அரசியல் விவகாரங்களைச் சரிசெய்யவேண்டியுள்ள நிலை உள்ளது என்றும், அவ்வறிக்கை கூறுகின்றது. 

ஏறக்குறைய 61 இலட்சம் மக்களைக் கொண்ட லெபனான் நாட்டில், பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட சிரியா நாட்டினர் அடைக்கலம் தேடியுள்ளனர் என, ஐ.நா. அலுவலகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.