2017-07-21 15:01:00

திருத்தந்தை : “ஒருபோதும் என, ஒருபோதும் சொல்ல வேண்டாம்!”


ஜூலை,21,2017. “ஒருபோதும் என, ஒருபோதும் சொல்லாதே!” என்று, தன்னைத் திருப்பயணத்திற்கு அழைத்திருந்த, ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவனுக்கு எழுதிய நன்றிக் கடிதத்தில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அந்த்ரேயா (Andrea) என்ற ஒன்பது வயதுச் சிறுவன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தனது புதுநன்மைப் பரிசாக, லொரேத்தோ திருத்தலத்திற்கு, சிறாரோடு திருப்பயணம் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது என்றும், இத்திருப்பயணத்தில், தங்களோடு இணையுமாறும், திருத்தந்தையைக் கேட்டுக்கொண்டுள்ளான்.

இக்கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள திருத்தந்தை, அன்பு அந்த்ரேயா, உனது அன்பான கடிதம் கிடைத்தது, UNITALSI அமைப்பு, லொரேத்தே திருத்தலத்திற்கு நடத்திய, சிறார் திருப்பயணத்தில் கலந்துகொண்ட உனது அனுபவம் பற்றி அறிந்து மகிழ்கின்றேன் என்று எழுதியுள்ளார்.

சிறாருடன் இருப்பது தனக்குப் பெருமகிழ்வைத் தரும் எனவும், உன்னோடு திருப்பயணம் மேற்கொண்ட சிறாருக்கும், பெற்றோருக்கும், தன்னார்வலர்களுக்கும் ஆசீரை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, “ஒருபோதும் என, ஒருபோதும் சொல்லாதே!” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Ilsussidiario.net. என்ற இத்தாலிய வலைத்தள தினத்தாள், திருத்தந்தை எழுதியுள்ள இக்கடிதம் பற்றி, ஜூலை 19, இப்புதனன்று செய்தி வெளியிட்டுள்ளது.   

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.