2017-07-19 16:39:00

குனேயோ மறைமாவட்டத்தின் 200ம் ஆண்டு கொண்டாட்டம்


ஜூலை,19,2017. திருஅவையின் வரலாறே ஒரு தடையாக மாறும்போது, தினசரி வாழ்வில் நாம் கொள்ளும் நம்பிக்கையின் சாட்சியம், அத்தடையைத் தாண்டிச் செல்ல, உதவும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வட இத்தாலியின் தூரின் உயர் மறைமாவட்டத்தைச் சார்ந்த ஒரு மறைமாவட்டமாக 1817ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குனேயோ (Cuneo) மறைமாவட்டம் தன் 200ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வேளையில், இக்கொண்டாட்டத்தில் பங்கேற்க திருத்தந்தையின் பிரதிநிதியாக, கர்தினால் ஜியுசெப்பே பெர்தோல்லோ (Giuseppe Bertello) அவர்கள் பங்கேற்றார்.

வத்திக்கான் அரசுக்கு ஆளுனராகப் பணியாற்றும் கர்தினால் பெர்தோல்லோ அவர்கள், ஜூலை 16, கடந்த ஞாயிறன்று, குனேயோ மறைமாவட்டத்தின் விண்ணேற்பு அன்னை மரியா பேராலயத்தில், நூற்றாண்டு திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை வழங்கினார்.

திருஅவையின் அன்பு முகத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் சாட்சிகளாக அனைவரும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்று, கர்தினால் பெர்தோல்லோ அவர்கள் தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

இந்த 2ம் நூற்றாண்டு திருப்பலியில், மறைசாட்சியான புனித தல்மெசியுஸ் (St. Dalmatius), குனேயோ மறைமாவட்டத்தின் துணை பாதுகாவலர்களில் ஒருவர் என்று அறிவிக்கப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.