2017-07-18 15:15:00

பிலிப்பீன்ஸ் பள்ளிகளில் அமைதிக்காக 14 நாள்கள் செபம்


ஜூலை,18,2017. பிலிப்பீன்ஸ் நாட்டில், புரட்சியாளர்களால் ஆக்ரமிக்கப்பட்ட மராவி நகரில், அமைதி நிலவ வேண்டுமென்பதற்காக, அந்நாட்டுப் பள்ளிகளில் 14 நாள்கள் செப நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் இராணுவத்திற்கும், புரட்சியாளர்களுக்குமிடையே கடந்த மே 23ம் தேதியிலிருந்து, கடும் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டின் கத்தோலிக்க கல்விக் கழகம், அமைதிக்காகச் செபிக்கும் பக்தி முயற்சியை, இத்திங்களன்று ஆரம்பித்துள்ளது.

மராவி நகரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, கத்தோலிக்க மாணவரைத் தூண்டும் விதமாக, பிலிப்பீன்சிலுள்ள 1,425 கத்தோலிக்க கல்வி நிறுவனங்களைக் கொண்ட இக்கழகம், இம்முயற்சியில் இறங்கியுள்ளது. 

இதற்கிடையே, மராவி நகர் அமைந்துள்ள மின்டனாவோ தீவில் அமலிலுள்ள, அறுபது நாள் இராணுவச் சட்டத்தை வரவேற்றுள்ள மராவி ஆயர் Edwin de la Peña அவர்கள், இச்சட்டத்தை மேலும் நீட்டிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்,

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.