2017-06-28 16:47:00

விருப்பத்தின் அடிப்படையில் உருவாகும் குடியேற்றம் நோக்கி...


ஜூன்,28,2017. ஒவ்வொரு நாட்டிலும், குடிமக்களுக்கு, பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் உருவாக்குவது, அரசுகளின் தலையாயக் கடமை என்றும், அத்தகையச் சூழல் நிலவும்போது, குடியேற்றம் என்பது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாகும் என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

ஜூன் 28 இப்புதன் முதல் 30 இவ்வெள்ளி முடிய ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில், குடியேற்றமும் முன்னேற்றமும் என்ற தலைப்பில் நடைபெறும் பத்தாவது பன்னாட்டு கருத்தரங்கில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் செயலராகப் பணியாற்றும் அருள்பணி மைக்கில் செர்னி அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

உலக சமுதாயத்தின் அனைத்து மனிதர்களை, குறிப்பாக, வலுவிழந்த மனிதர்களை கருத்தில் கொண்டு முன்னேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டால், குடிபெயர்தல் என்ற பிரச்சனைக்கே இடமில்லாமல் போகும் என்பதை தன் உரையில் வலியுறுத்திய இயேசு சபை அருள்பணி செர்னி அவர்கள், இத்தகைய திட்டங்கள் பல நாடுகளில் இல்லாத நிலையே, குடிபெயர்தல், புலம் பெயர்தல் என்ற பிரச்சனைகளை, நெருக்கடி நிலையாக உலகெங்கும் உருவாக்கியுள்ளது என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.