2017-06-22 15:07:00

இயேசு சபை சமூக நிறுவனங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு..


ஜூன்,22,2017. இயேசு சபை அ.பணி. ஜோசப் சேவியர் அவர்கள், உரோம், உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில், அச்சபையின் JRS புலம்பெயர்ந்தோர் அமைப்பின் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவர், ஒரு வழக்கறிஞர் மற்றும், மனித உரிமை ஆர்வலர். இயேசு சபையின் தெற்காசிய சமூகப் பணி ஒருங்கிணைப்பாளர்(2001-2007), பெங்களூரு இயேசு சபையினரின் ISI சமூக நிறுவனத்தில் மனித உரிமைகள் துறை பொறுப்பாளர்(2007-2009), டெல்லி இயேசு சபையினரின் ISI சமூக நிறுவனத்தின் இயக்குனர்(2012-2015) என, முக்கிய பொறுப்புக்களை வகித்திருப்பவர் அருள்பணி ஜோசப் சேவியர் சே.ச. ISI என்ற இயேசு சபையின், இந்திய சமூக நிறுவனங்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆற்றும் பணிகள் பற்றி இன்று பகிர்ந்து கொள்கிறார்








All the contents on this site are copyrighted ©.