2017-06-15 15:55:00

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கத்தோலிக்கர் உதவி


ஜூன்,15,2017. இங்கிலாந்து நாட்டின் வட கென்சிஸ்டன் பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர், மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், தன் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார்.

இத்தீவிபத்தைக் கட்டுப்படுத்த அயராது பணியாற்றிய தீயணைப்பு படையினருக்கும், பாதிக்காப்பட்டோருக்கு அவசர மருத்துவ உதவிகள் செய்தோருக்கும் தன் பாராட்டுக்களையும், நன்றியையும், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல பங்குகளில், தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, தங்குமிடங்கள், மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்படுகின்றன என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

ஜூன் 14, இப்புதன் நள்ளிரவில், Grenfell Tower என்றழைக்கப்படும் 24 மாடிகள் கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால், இதுவரை, 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.