2017-06-09 16:09:00

பெருங்கடல்கள், பாதுகாப்பான, செல்வம் நிறை, நீல இல்லமாகத் திகழ


ஜூன்,09,2017. நமது பெருங்கடல்கள், அமைதியான, பாதுகாப்பான, செல்வங்கள் நிறைந்த நீல இல்லமாக திகழ்வதற்கு, உலகினர் அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

ஜூன் 8, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட உலகப் பெருங்கடல்கள் நாளையொட்டி செய்தி வழங்கிய கூட்டேரஸ் அவர்கள், கடல்களைப் பெருமளவில் பயன்படுத்தும் மனிதர்கள், அவற்றைப் பராமரிக்கவும் கற்றுக்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.

ஐ.நா. அவை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பெருங்கடல் கருத்தரங்கு', ஜூன் 5 இத்திங்கள் முதல், 9 இவ்வெள்ளி முடிய நியூ யார்க் நகரில், ஐ.நா. பொது அவையில் சிறப்பிக்கப்பட்ட வேளையில், ஜூன் 8, இவ்வியாழனன்று உலகப் பெருங்கடல்கள் நாளும் இணைந்து சிறப்பிக்கப்பட்டது.

நம்மால் அளந்து பார்க்க முடியாதவற்றை மேலாண்மை செய்யமுடியாது என்பதால், கடல்களைப் பற்றிய அறிவை நாம் வளர்த்துக்கொள்வதன் வழியே, அவற்றை இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்கவும் முடியும் என்று, UNESCO இயக்குனர், இரீனா போகோவா (Irina Bokova) அவர்கள் உலகப் பெருங்கடல்கள் நாளுக்கென வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.