2017-06-09 16:29:00

அருள்பணி Jacques Hamel அவர்களுக்கு இறையமைதி – புதிய நூல்


ஜூன்,09,2017. இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட இரு இளையோரால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்ட அருள்பணி Jacques Hamel அவர்களை பற்றிய நூல் ஒன்று, ஜூன் 14ம் தேதி வெளியாகும் என்று பிரான்ஸ் நாட்டின் Rouen மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி, திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்ட அருள்பணி Jacques Hamel அவர்களைப் பற்றிய இந்நூல், மொகம்மது நதீம் (Mohammed Nadim) என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

"அருள்பணி Jacques Hamel அவர்களுக்கு இறையமைதி" (“Requiem for Father Jacques Hamel”) என்ற தலைப்பில் வெளியாகும் இந்நூல், அருள்பணி Hamel அவர்களுக்கு, நதீம் அவர்கள், மனம் திறந்து எழுதியுள்ள கடிதங்கள் வடிவில் வெளியாகின்றது.

அருள்பணி Jacques Hamel அவர்கள் கொலையுண்ட செய்தி கேட்டு மனமுடைந்துபோன நதீம் அவர்கள், இஸ்லாம் என்ற மதத்தின் பெயரால், நடத்தப்படும் வன்முறைகள் எவ்வளவு மதியற்றவை என்பதை இந்நூலில் கூறியுள்ளார் என்று, இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள Rouen பேராயர் தோமினிக் லெப்ரூன் (Dominique Lebrun) அவர்கள் கூறியுள்ளார்.

அருள்பணி Jacques Hamel அவர்களை புனிதராக்கும் வழிமுறைகள் Rouen மறைமாவட்டத்தால் துவக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.