2017-05-31 16:22:00

மே 31 - புகையிலை ஒழிப்பு உலக நாள்


மே,31,2017. புகையிலைப் பயன்பாட்டை ஒழிப்பது, பல இலட்சம் உயிர்களை பாதுகாக்கும் என்றும், வறுமையை ஒழிக்கும் என்றும், ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனமான WHO அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கவும், வறியோர் வாழும் பகுதிகளை நலமற்றதாக மாற்றவும் வழிசெய்யும் ஒரு முக்கிய காரணி, புகையிலை என்று, WHO இயக்குனர், மார்கரெட் சான் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மே 31, இப்புதனன்று, புகையிலை ஒழிப்பு உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய சான் அவர்கள், உலக அரசுகள் அனைத்தும் இணைந்து, புகையிலைப் பயன்பாட்டுக்கு எதிரான சட்டங்களை இன்னும் கடுமையாக மாற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புகையிலை பயன்பாட்டினாலும், புகையிலைக் கழிவுகளாலும் 7000த்திற்கும் மேற்பட்ட ஆபத்தான நச்சுப் பொருள்கள் காற்றில் கலந்துவிடுகின்றன என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை முதல்முறையாக கூறியுள்ளது.

உலகில் ஒவ்வொரு நாளும் 100 கோடி முதல், 150 கோடி வரை சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தைக் கொணர்கின்றன என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.