2017-05-26 15:53:00

பல்கேரியா, மாசிடோனியா அரசுத்தலைவர்கள் சந்திப்பு


மே,26,2017. பல்கேரிய அரசுத்தலைவர் Rumen Radev, மாசிடோனிய அரசுத்தலைவர் Gjorge Ivanov ஆகிய இருவரையும், இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்கேரிய மற்றும், மாசிடோனிய நாடுகளின் அரசுத்தலைவர்கள் திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் செயலகத்தின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் சந்தித்துப் பேசினர்.

இவ்விரு நாடுகளுடன் திருப்பீடம், தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவுகள், இந்நாடுகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் போன்றவை குறித்து, இந்நாடுகளும், திருப்பீடமும் திருப்தியுடன் இருப்பதாக, இச்சந்திப்புக்களில் கூறப்பட்டன என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

திருப்பீடத்திற்கு முதல்முறையாக வந்திருந்த பல்கேரிய அரசுத்தலைவர் Radev அவர்கள், திருத்தந்தையுடன் உரையாடியபின், புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் படம் ஒன்றையும், புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் பற்றிய நூல் ஒன்றையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். 

இரு ஆர்த்தடாக்ஸ் அருள்பணியாளர்களுடன் திருத்தந்தையைச் சந்திக்கச் சென்றிருந்த மாசிடோனிய அரசுத்தலைவர் Ivanov அவர்கள், திருத்தந்தைக்கு, மரத்தாலான அழகிய சிலுவை ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.

திருத்தந்தையும், Laudato si' Evangelii gaudium, Amoris Laetitia, ஆகிய தனது மூன்று ஏடுகளையும், புனித மார்ட்டீன் பதக்கம் ஒன்றையும், இவ்விரு அரசுத்தலைவர்களுக்கும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.