2017-05-10 16:00:00

பாசமுள்ள பார்வையில்............பணி வழி சுகம்


அன்று வீட்டில் மீண்டும் ஒரு கலகம். வீட்டை ஒழுங்குபடுத்திய அம்மா, அன்று தன் பேரப்பிள்ளைகளின் புத்தகங்களை எங்கோ மறதியாக எடுத்து வைத்து விட்டார்களாம். மகனும் மருமகளும் எல்லாப் புத்தகங்களுக்கிடையிலும் தேடியாகி விட்டது, ஒரு புத்தகம் மட்டும் கிடைக்கவில்லை. பேரப்பிள்ளைகளுக்கு புத்தகத்தைக் காணவில்லையே என்ற கவலை மட்டும்தான் இருந்தது. பாட்டி மீது கோபம் வரவில்லை. ஏனெனில் ஒரு நாளும் அவர்கள் இரண்டு பேரும் தாங்கள் படித்த புத்தகங்களை அடுக்கி வைத்ததேயில்லை. அவர்கள் அம்மாவுக்கும் நேரமில்லை. எல்லாம் பாட்டிதான் செய்வார்கள். மருமகளுக்கோ மாமியார் மீது அடக்க முடியாத கோபம். சும்மாவே சண்டை போடும் மருமகளுக்கு, இப்படியொரு காரணம் கிடைத்ததும் வீடு இரண்டாகி விட்டது. மனைவியை சமாதானப்படுத்த முடியாத மகன், அம்மாவை நன்றாகத் திட்டிவிட்டான். தாயும், தன் மகனின் நிலை உணர்ந்து, அவன் மீது கோபப்படவில்லை. 'நீங்கள் ஒரு வேலை செய்தால் அது எங்களுக்கு இரண்டு வேலை ஆகிறது. பேசாமல் மூலையில் முடங்க வேண்டியதுதானே' என மகனும் மருமகளும் கடுமையாகக் கூறியபோதுதான், அந்த தாயின் கண்களில், கண்ணீர் எட்டிப் பார்த்தது. 55 வயதில் போய் மூலையில் முடங்குவதா?  ஏழு வயது இரட்டைக் குழந்தைகளுக்கு பாட்டியாக இருந்து, தான் செய்யும் பணிகளில் கிடைக்கும் சுகத்தை மகனுக்கும் மருமகளுக்கும் எப்படி புரிய வைப்பது எனத் திணறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.