2017-05-09 15:29:00

புலம்பெயர்தல் குறித்த தொலைநோக்குப் பார்வை, ஒப்பந்தம் அவசியம்


மே,09,2017. புலம்பெயர்தல் மற்றும், மனித உரிமைகள் குறித்து, உலகளாவிய அளவில் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்குத் தயாரிப்பாக, இத்திங்களன்று நடைபெற்ற ஒரு ஐ.நா. ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றினார், பேராயர் இவான் யூர்க்கோவிச்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், இந்த ஐ.நா. ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றுகையில், தொலைநோக்குப் பார்வைகொண்ட புலம்பெயர்தல் குறித்த ஒப்பந்தம் அவசியம் என்று கூறினார்.

புலம்பெயரும் ஒவ்வொருவரும் மனிதர்கள், இவர்கள் எல்லாரும் மாண்புடன் வாழ்வதற்கு, தவிர்க்க இயலாத மற்றும் அடிப்படை உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டிப் பேசினார், பேராயர் யூர்க்கோவிச்.    

புலம்பெயர்ந்தோர் குறித்து, உலக அளவில் காணப்படும் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கிய கொள்கைகள் மற்றும், புலம்பெயர்ந்தோர்க்குப் பணியாற்றுவதற்கு அர்ப்பணம் போன்றவற்றை வகுக்கும், ஓர் உலகளாவிய ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு இக்கூட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.