2017-05-08 16:49:00

பாத்திமாவில் கிழக்கு தீமோர் நாட்டு திருப்பயணிகள் குழு


மே,08,2017. போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சிகொடுத்த புதுமைகளின் முதல் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் இவ்வாறு இறுதியில் இடம்பெறவுள்ள வேளையில், இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள கிழக்கு தீமோர் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் திருப்பயணிகள் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.

முன்னாள் போர்த்துக்கீசிய காலனியாக இருந்த கிழக்கு தீமோர் நாட்டில், மக்கள் வாழ்வில், பாத்திமா அன்னை மையமாக இருந்து வந்துள்ளார் என்று, அந்நாட்டுத் தலைநகர், டிலியின் (Dili) ஆயர் விர்ஜிலியோ தோ கார்மோ தா சில்வா (Virgilio do Carmo da Silva) அவர்கள் கூறியுள்ளார்.

1975ம் ஆண்டு வரை, போர்த்துக்கல் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு தீமோரில் மரியன்னைக்கு வணக்கம் செலுத்தும் மரபு, போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் வழியே வலிமைபெற்றது என்று ஆயர் தா சில்வா அவர்கள் கூறினார்.

பாத்திமா அன்னையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள கிழக்கு தீமோர் கத்தோலிக்க மக்கள் குழு சென்றிருப்பது, இவ்விரு நாடுகளுக்கிடையே நிலவும் நெருங்கியத் தொடர்பை வெளிப்படுத்துகிறது என்றும், ஆயர் தா சில்வா அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.