2017-05-02 16:17:00

மனித வர்த்தகத்திற்கெதிராய், இந்தியா பங்களாதேஷ் திருஅவைகள்


மே,02,2017. ஆயிரக்கணக்கான பெண்களும், சிறாரும், பங்களாதேஷ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர்த்தகம் செய்யப்படுவதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளவேளை, இவ்விரு நாடுகளின் கத்தோலிக்கத் திருஅவைப் பணியாளர்கள் இணைந்து மனித வர்த்தகத்திற்கெதிராய் உழைப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

பங்களாதேஷ் காரித்தாஸ் நிறுவனமும், டெல்லி உயர்மறைமாவட்டத்தின், செத்னாலயா (Chetnalaya) சமூகநல நிறுவனமும் இணைந்து, கடந்த ஏப்ரல் இறுதியில், மூன்று நாள் கூட்டம் நடத்தி, இவ்வாறு தீர்மானித்தன.

இவ்விரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஆற்றிய பணியின் பயனாக, 2015ம் ஆண்டில், 89 சிறுமிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

2004ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 8,761 சிறுமிகள் பங்களாதேஷ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளனர் என, அந்நாட்டு காவல்துறை கூறியுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.