2017-04-19 16:58:00

உலகில் சமாதானத்தை நிலைநாட்ட, மதங்களின் முக்கிய பங்கு


ஏப்.19,2017. இவ்வுலகை இன்னும் பாதுகாப்பான இடமாக மாற்றவும், கிழக்கு-மேற்கு மோதல்களைத் தவிர்க்கவும், கத்தோலிக்க திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும், முயற்சிகள் மேற்கொள்வது மிக அவசியம் என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை, கிரில் அவர்கள் கூறினார்.

உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முன், இத்தாலிய அரசுத்தலைவர், Sergio Mattarella அவர்களும், மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் தலைவர், கிரில் அவர்களும் மேற்கொண்ட ஒரு சந்திப்பின்போது, ஐரோப்பாவிலும், உலகெங்கும் சமாதானத்தை நிலைநாட்ட, மதங்கள் முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று கூறினார்.

சிரியா நாட்டில் நிகழும் அவலங்களை முடிவுக்குக் கொணர்வதற்கு, ஈரான் நாட்டின் Ayatollah Ali Khamenei அவர்களின் உதவி தேவையென்றும், சீனா, வட கொரியா ஆகிய நாடுகளில் மத உணர்வு வளர்க்கப்படவேண்டும் என்றும் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

உயிர்ப்புப் பெருவிழாவையோட்டி, மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் உயர்மட்டக் கூட்டத்தில், மதத் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, போர் என்ற சாத்தானை விரட்டுவது அவசியம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டதென்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.