2017-04-10 15:45:00

தவக்காலச் சிந்தனை : அன்பை வெளிப்படுத்துவோம்


இயேசு கிறிஸ்து, சிலுவையிலே தன் உயிரை தியாகம் செய்து, நம்மீது கொண்ட அன்பினை வெளிக்காட்டியதை தியானிக்கின்ற இந்த தவக்காலத்திலே, நாமும் ஒருவரொருவரோடு கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றோம். நம்மில் பலருக்கு, பிறர் மீது அன்பு இல்லாமல் இல்லை. மாறாக, அந்த அன்பினை வெளிப்படுத்தத் தெரிவதில்லை. வெளிப்படுத்தாத அன்பு, இறந்த அன்பிற்கு சமம். நாம் பிறர்மீது கொண்டுள்ள அன்பினை, பல வழிகளில் வெளிப்படுத்தலாம். பிறரை பார்க்கும்பொழுது, முகம் மலர்ந்து, புன்னகை செய்வது, மனதிற்கு மகிழ்வுதரும் வார்த்தைகளை பகிர்ந்துகொள்வது, தேவைகளை உணர்ந்து சிறு சிறு உதவிகள் செய்வது, பிரச்சனைகளில் இருக்கும் பொழுது ஆறுதலாக இருப்பது, என, ஆயிரமாயிரம் வழிகள் இருக்கின்றன. அன்பு வெளிப்படும்பொழுது, அங்கே, ஒரு பரஸ்பர வளர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது. எனவே, பிறர்மீதுள்ள அன்பினை, நமது சிறு சிறு செயல்கள்மூலம் வெளிப்படுத்துவோம். ஆனந்தத்தை நமது வாழ்வில் அதிகரிப்போம். (அ.சகோ. செலூக்காஸ் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.