2017-03-31 15:11:00

தவக்காலச் சிந்தனை - விமர்சனம்


நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், பிறரின் விமர்சனத்திலிருந்து தப்புவதில்லை என்பது எதார்த்தம். சிலவேளைகளில் நம்மைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பயந்து, நமது முயற்சிகளை முடக்கிக்கொள்கின்றோம். இது நமது திறமைகளையும் ஆற்றல்களையும் சிறைபிடித்து விடுகின்றது. எனவே, பெரும்பாலான நேரங்களில் நம்மைப் பற்றிய விமர்சனங்களிலிருந்து தப்பித்துக்  கொள்வதாக நினைத்துக்கொண்டு, வாழ்வின் எதார்த்தங்களைச் சந்திக்கும் மனத்துணிவை இழந்து விடுகின்றோம். இவை நமது நற்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றன. தன்னைப்பற்றிய விமர்சனங்களை எதிர்கொண்டு, தனது இலக்கினை அடைந்த இயேசு கிறிஸ்து போன்று, இந்த தவக்காலத்திலே  நம்மைப் பற்றி கூறப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வோம். நாம் செய்யும் நற்செயல்களை, தொடர்ந்து செய்துகொண்டேயிருப்போம். முதலில் நம்மை விமர்சித்தவர்கள் காலப்போக்கில் நம்மை புரிந்துகொண்டு நமது செயல்களை ஆதரிப்பார்கள் என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.