2017-03-30 14:17:00

மேலும் ஒரு மெக்சிகோ அருள்பணியாளர் கொலை


மார்ச்,30,2017. மெக்சிகோ நாட்டின் El Nayar எனுமிடத்தில், இவ்வாரத்துவக்கத்தில் அருள்பணியாளர் ஒருவரை, அடையாளம் தெரியாத குழு ஒன்று, சுட்டுக்கொன்றுள்ளது.

மெக்சிகோவின் பூர்வீகக்குடியைச் சேர்ந்த அருள்பணியாளர் Felipe Altamirano Carrilloவைக் கொலைச்செய்தவர்கள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களா அல்லது வழிப்பறிக்கொள்ளையர்களா என, காவல்துறை, தன் விசாரணையைத் தொடர்ந்து வருவதாக அறிவித்துள்ளது.

இவ்வாண்டில் மெக்சிகோ நாட்டில் கொலைச்செய்யப்பட்டுள்ள இரண்டாவது அருள்பணியாளராவார் இவர். கடந்த ஆண்டில் மூன்று அருள்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் 2006ம் ஆண்டிலிருந்து இதுவரை 32 அருள்பணியாளர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இன்னொரு மெக்சிகோ அருள்பணியாளர் Alejandro Solalinde என்பவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோ நாட்டில் குடிபெயர்வோர் மற்றும் அகதிகளுக்கென பல மையங்களை நடத்தி, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் அருள்பணியாளர் Solalinde அவர்கள், தன் வாயை மூடவில்லையெனில், கொலைச் செய்யப்படுவார் என ஒலி ஒளி மிரட்டல் பதிவு ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளது, பயங்கரவாத குழு ஒன்று.

ஆதாரம் :  Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.