2017-03-29 16:11:00

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஆபிரகாமின் குழந்தைகள்


மார்ச்,29,2017. உடன்பிறந்த உணர்வுடன் நாம் மேற்கொள்ளும் சந்திப்புக்கள், உரையாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் விருப்பமான செயல்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய பிரதிநிதிகளிடம் கூறினார்.

பலசமய உரையாடல் திருப்பீட அவையும், ஈராக் நாட்டின் இஸ்லாமியப் பிரதிநிதிகள் குழுவும் இணைந்து, உரோம் நகரில் மேற்கொண்டுள்ள ஓர் உரையாடலில் பங்கேற்க வந்திருந்த பிரதிநிதிகளை, இப்புதன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, உடன்பிறந்த உணர்வு மட்டுமே, உலகில் அமைதியை உறுதி செய்யும் என்று கூறினார்.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒரே இறைவன் என்ற நம்பிக்கையை பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், ஆபிரகாமின் குழந்தைகள் என்ற பாரம்பரியத்தையும் நாம் பகிர்ந்து வருகிறோம் என்று திருத்தந்தை இச்சந்திப்பில் கூறினார்.

மேலும், "நம்பிக்கையிலிருந்து ஊற்றெடுக்கும் அமைதி, ஒரு கொடை: கடவுள் எப்போதும் நம்மருகே இருந்து, நம்மை அன்புகூருகிறார் என்ற வரம் அது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.