2017-03-29 16:32:00

கானடாவில் 'பூமிக்கோள நேரம்' - கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு


மார்ச்,29,2017. மார்ச் 25, கடந்த ஞாயிறன்று உலகின் பல நாடுகளில் சிறப்பிக்கப்பட்ட 'அகில உலக பூமிக்கோள நேரம்' என்ற முயற்சியையொட்டி, கானடா ஆயர் பேரவையும், கானடாவின் ஏனைய கிறிஸ்தவ சபைகளும் இணைந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு வழிபாட்டை மேற்கொண்டனர்.

இந்த ஒன்றிப்பு வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கு புகழ் - நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்' என்ற திருமடலிலிருந்தும், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் கருத்துத் தொகுப்புக்களிலிருந்தும் வாசகங்கள் வாசிக்கப்பட்டன என்று, வத்திக்கான் நாளிதழ், L’Osservatore Romano கூறியுள்ளது.

கானடாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாடுகளில், மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, பெரும்பாலும், மெழுகுதிரிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன என்று, வத்திக்கான் நாளிதழ், L’Osservatore Romano மேலும் கூறியுள்ளது.

2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் துவங்கிய 'பூமிக்கோள நேரம்' என்ற முயற்சி, இவ்வாண்டு மார்ச் 25, கடந்த ஞாயிறன்று, 187 நாடுகளில் உள்ள பல்லாயிரம் நகரங்களில் கடைபிடிக்கப்பட்டது என்றும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் நேரம், இரவு 8.30 முதல், 9.30 முடிய விளக்குகள் அணைக்கப்பட்டன என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.