2017-03-28 16:12:00

உத்திரப்பிரதேசத்தில் சேதமாக்கப்பட்ட கல்லறைத் தோட்டம்


மார்ச்,28,2017. கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்ற பொய் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, உத்திரப்பிரதேசத்தில், கிறிஸ்தவக் கல்லறை தோட்டம் ஒன்று, வன்முறையாளர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

தலித் மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொணரவேண்டும் என்ற நோக்கத்துடன், உத்திப்பிரதேசத்தின் தற்போதைய முதல்வரால், 2002ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'இந்து யுவவாஹினி' என்ற அமைப்பு, கிறிஸ்தவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவதாக, தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள இராஜாப்பூர் அலகாபாத் கல்லறைத் தோட்டத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலில், பல சிலுவைகள் பிடுங்கி எறியப்பட்டதுடன், 10க்கும் மேற்பட்ட கல்லறைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்து யுவவாஹினி கூறிவரும் மதமாற்றக் குற்றச்சாட்டு எவ்வித ஆதாரமும் அற்றது என்று கூறும் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவைத்தலைவர், சஜன் கே. ஜார்ஜ் அவர்கள், கல்லறைகள் சேதமாக்கப்பட்டுள்ளது, கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவதாகவும், இறந்தோர் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என்று கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.