2017-03-27 16:42:00

அகதிகளை அரவணைத்து அங்கீகரிப்பதே சிறந்த சேவை


மார்ச்,27,2017. வன்முறையாலும் மோதல்களாலும் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறும் சிரியா நாட்டு மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அகதிகளுக்குரிய அங்கீகாரத்தை வழங்குவதே, சிறந்த சேவையாக இருக்க முடியும் என பிரித்தானிய அரசை பாராட்டியுள்ளது, Christian Aid பிறரன்பு அமைப்பு.

சிரியா அகதிகளுக்கு அங்கீகாரம் வழங்கி அவர்களை நாட்டிற்குள் குடியமர்த்தும் பிரித்தானிய உள்துறை செயலகத்தின் தீர்மானம் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ள Christian Aid அமைப்பு, இத்தகைய நடவடிக்கைகள் வழியாக, எண்ணற்ற சிரியா அகதிகள், கல்வி கற்பதற்கும், வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கும் உரிய உரிமைகளைப் பெறுவர் என தெரிவிக்கிறது.

அகதிகளாக நாட்டிற்குள் நுழைந்த  சிரியா மக்களை அங்கீகரித்து, புதிய சலுகைகள் வழங்குவதன் வழியாக, பிரித்தானிய நாட்டிற்கு அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க முடியும் எனவும் கூறியது Christian Aid அமைப்பு.  

2020ம் ஆண்டிற்குள் 20,000 சிரியா அகதிகளை குடியமர்த்தும் திட்டத்தைக் கொண்டுள்ள பிரித்தானிய அரசு, இதுவரை, 6000க்கும் குறைவான அகதிகள் குடியமர்த்தப்படவே உதவியுள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.