2017-03-24 16:06:00

உலக காலநிலையியல் நாள் - மார்ச் 23


மார்ச்,24,2017. கலையையும் கனவுகளையும் மனதில் உருவாக்கும் மேகங்களை நாம் சரிவரப் புரிந்துகொண்டால், காலநிலை மாற்றத்தை முன்னறிவிக்கவும், தண்ணீர் கிடைக்கும் அளவை நிர்ணயிக்கவும், இயலும் என்று, ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 23ம் தேதி சிறப்பிக்கப்படும் காலநிலையியல் உலக நாளையொட்டி, ஐ.நா. காலநிலையியல் நிறுவனத்தின் பொதுச் செயலர், பெட்டெரி டாலஸ் (Petteri Taalas) அவர்கள் இவ்வாறு கூறினார்.

1950ம் ஆண்டு முதல், மார்ச் 23ம் தேதி சிறப்பிக்கப்பட்டுவரும் காலநிலையியல் உலக நாளுக்கென, "மேகங்களைப் புரிந்துகொள்ளுதல்" என்பது, இவ்வாண்டின் மையக்கருத்தாக அமைந்திருந்தது.

மக்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பதற்கு, மேகங்களைக் குறித்த ஆய்வுகள் இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும் என்று டாலஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

19ம் நூற்றாண்டுமுதல் பயன்படுத்தப்பட்டு வரும் International Cloud Atlas, அதாவது, அகில உலக மேக வரைப்படம் என்ற தகவல் தொகுப்பு, இவ்வாண்டு, முதல் முறையாக, 'டிஜிட்டல்' வடிவில் மாற்றப்பட்டுள்ளது என்று, ஐ.நா. காலநிலையியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.