2017-03-21 15:44:00

புனித பூமி சீரமைப்புப் பணிகளுக்கு திருப்பீடம் உதவி


மார்ச்,21,2017. புனித பூமியிலுள்ள பெத்லகேம் கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவையும், எருசலேமில் இயேசுவின் கல்லறைக் கோவிலையும் சீரமைப்பதற்கு உதவும் நோக்கில், திருப்பீடம் பத்து இலட்சம் டாலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

திருப்பீடச் செயலகமும், கீழை வழிபாட்டுமுறை பேராயமும் இணைந்து 10 இலட்சம் டாலர்களை வழங்கவுள்ளதாக உரைத்த புனித பூமிக்குப் பொறுப்பான அவை, முக்கிய சீரமைப்புப் பணிகள் முடிவுற்று வருவதாகவும், விரைவில் முழுப்பணிகளும் நிறைவுறும் எனவும் தெரிவித்தது.

தற்போது நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளுக்கும், இனிமேல் மேற்கொள்ளப்படவிருக்கும் புதிய திட்டப் பணிகளுக்கும் என, இத்தொகையை வழங்க உள்ளதாக, திருப்பீடச் செயலகமும், கீழை வழிபாட்டுமுறை திருப்பேராயமும் இணைந்து அறிவித்துள்ளன.

ஆதாரம் : Zenit/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.