2017-03-20 16:16:00

பெரு மக்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் திருத்தந்தை


மார்ச்,20,2017. பெரும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பெரு நாட்டு மக்களுடன் தன் அருகாமையைத் தெரிவிப்பதாக, ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பெரு நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருமழை பெய்து, பேரழிவுகளையும் 75க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுடன் தன் அருகாமையை தெரிவிப்பதுடன், உயிரிழந்தவர்கள் மற்றும் அந்நாட்டின் துயர் துடைப்புப் பணியாளர்களுக்காக தான் செபிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இத்தாலியின் Bolzano நகரில், Josef Mayr-Nusser என்ற இறையடியார், கடந்த சனிக்கிழமையன்று, அருளாளராக அறிவிக்கப்பட்டதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட இவர், அனைத்து பொது நிலையினருக்கும், குறிப்பாக, புனித யோசேப்பின் விழாவன்று நினைவு கூரப்படும் அனைத்துத் தந்தையர்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.