2017-03-20 15:09:00

தவக்கால சிந்தனை.. நன்னயம் செய்து விடல்!


சிலரைப் பார்க்கும்போது, நமது முகம் தானாகத் திரும்பிக்கொள்ளும் அல்லது, பார்க்காதது போல் நம்மிடம் நடிப்பு வந்து ஒட்டிக்கொள்ளும். காரணம், கடந்த காலச்  செயல்கள், நினைவுகள். மன்னிப்பைப்பற்றி பல வேளைகளில் கேட்டிருப்போம். சொல்லுக்கு எளிது ஆனால், செயலுக்கு கடினம் என்று நாம் விட்டுவிடுகிறோம். தவ முயற்சிகளை அதிகமாய் கைக்கொள்ளும் இந்நாள்களில், நாம், என்றோ, எப்போதோ,  பெற்ற மன்னிப்பை, பிறருக்கு வழங்குவது ஒரு நல்ல முயற்சி. ஆனால், நமக்கு தீங்கிழைத்தவர்களுக்கு நன்மையும் செய்வது, அந்த மன்னிப்பின் தொடர்ச்சி. மன்னிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு நன்மையும் செய்வதற்கு மனவலிமை தேவை. இவ்வாறு செய்தால், 'என்ன பத்தி என்ன நினைப்பான் அவன்' என்று வெதும்பும் நம்  மனதை அடக்குவதற்கு முதலில் வலிமை வேண்டும். முயன்று தான் பார்ப்போமே. பிறரன்பு, மன்னிப்பில் துவங்கி, நன்மையில் பயணிக்கட்டுமே. அனைவருமே அடிப்படையில் நல்ல எண்ணம் கொண்டவர்களே. நன்மை நம்மிடமிருந்து பரவட்டும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல். (அ.சகோ.இராஜ சேகரன் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.