2017-03-13 16:21:00

வத்திக்கானுடன் அரசியல் உறவை உருவாக்க முன்வரும் மியான்மார்


மார்ச்,13,2017. மியான்மார் நாட்டிற்கும் வத்திக்கானுக்கும் இடையே முழு அரசியல் உறவை உருவாக்க திருப்பீடம் வழங்கிய பரிந்துரைகளை ஏற்றுள்ளதாக மியான்மார் அரசு அறிவித்துள்ளது.

அரசியல் உறவை உருவாக்குவதற்கு, தாய்லாந்திற்கான திருப்பீடத்தூதரும், மியான்மார் நாட்டிற்கான அரசியல் பிரதிநிதியுமான பேராயர் Paul Tsang in-Nam அவர்களும், மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் போ அவர்களும் இணைந்து, கடந்த மாதம், திருப்பீடத்தின் பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, அதனை தற்போது மியான்மார் பாராளுமன்றம் ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.

புதிதாக ஏழு நாடுகளுடன் அரசியல் உறவை உருவாக்குவது குறித்து அரசால் வழங்கப்பட்டுள்ள ஒப்புதலில் வத்திக்கான் நாடும் அடங்கியுள்ளது.

வத்திக்கான், கினி, மால்ட்டா, ஈக்குவதோர், ஷேசெல்ஸ், லைபீரியா, மார்ஷல் தீவுகள்  ஆகியவைகளுடன் புதிதாக அரசியல் உறவை உருவாக்க உள்ளது மியான்மார்.

ஆதாரம் :  AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.