2017-03-13 14:37:00

தவக்கால சிந்தனை.. முன்மாதிரி (மத்.23,1-12)


மனிதர்களின் சிறந்த ஆசிரியர், அடுத்திருப்பவர்கள்தான். நம்மோடு பயணிக்கும் சக மனிதர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நம்மை உருவாக்குகின்றார். பிறரது சொற்களும், கருத்துக்களும் நமது சிந்தனைகளை வளர்க்கின்றன. பிறரது செயல்பாடுகள் நம்மைச் செதுக்குகின்றன. இவற்றை நாமும் பிறருக்கு செய்கின்றோம். ஆனால் அறிவியலும் தொழில்நுட்பமும் மிகுந்த இந்த காலகட்டத்தில், சரியான முன்மாதிரிகளை காண்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கின்றது. இயேசுகிறிஸ்து சுட்டிக்காட்டுகின்ற மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் போன்று, சொல்வது ஒன்றும், செய்வது மற்றொன்றுமான நிலைப்பாட்டினைத்தான் எங்கும் நம்மால் காணமுடிகின்றது. இந்த தவக்காலம், நாம் அனைவரும், ஒரு சிறந்த முன்மாதிரியாக, வழிகாட்டியாக மாற, அழைப்புவிடுக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் சிறந்த குடும்பத்தலைவராக, குடும்பத்தலைவியாக, ஆசிரியராக, அரசியல் தலைவராக, அதிகாரியாக, துறவியாக மாறுவோம். நம்மைப் பார்த்து, நமது குழந்தைகளும், மாணவர்களும், தொண்டர்களும், ஊழியர்களும், மக்களும் நல்ல வாழ்க்கை படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளட்டும். இவ்வாறாக, நமது குடும்ப, சமுதாய, ஆன்மீக, அரசியல் வாழ்வில், நம் ஒவ்வொருவரும், சிறந்த முன்மாதிரியாக மாறும்பொழுது, நம் இறைத்தன்மையைப் பிரதிபலிப்பவர்களாக மாறுகின்றோம் என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை (அ.சகோ.செலூக்காஸ் சே.ச.).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.