2017-03-09 15:41:00

பிலிப்பின்ஸ் நாடு, துயரத்திலும், அழுகையிலும் ஆழ்ந்துள்ளது


மார்ச்,09,2017. பிலிப்பின்ஸ் அரசு, மரண தண்டனையை மீண்டும் சட்டமாக்க ஒப்புதல் தந்துள்ளது, தங்களுக்கு வேதனையைத் தந்தாலும், தங்கள் கருத்துக்களை வெளியிடுவதிலிருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்று, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மார்ச் 7, இச்செவ்வாயன்று, பிலிப்பின்ஸ் பாராளுமன்றம், மரண தண்டனையை மீண்டும் கொணரும் சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பது, நாட்டை பெரும் துயரத்திலும், அழுகையிலும் ஆழ்த்தியுள்ளது என்று ஆயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாழ்வு சாவை வெல்லும் என்பதை அறிக்கையிடும் தவக்காலத்தில், மக்களின் பிரதிநிதிகள், தங்கள் ஒப்புதலால் சாவை வெற்றிகொள்ள செய்திருப்பது பெரும் வேதனையைத் தருகிறது என்று, பேராயர் வியேகாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

Ferdinand Marcos அவர்கள் சர்வாதிகாரியாக இருந்த காலத்தில் நடைமுறையில் இருந்த மரண தண்டனை, 1987ம் ஆண்டு அரசுத் தலைவர், Corazon Aquino காலத்தில் பெருமளவு கைவிடப்பட்டது என்றும், 2006ம் ஆண்டு அரசுத் தலைவராக இருந்த Gloria Arroyo அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை சந்திக்க செல்வதற்கு முன், மரண தண்டனையை நாட்டில் முற்றிலுமாக ஒழித்தார் என்றும், பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.