2017-03-08 14:54:00

தவக்காலச் சிந்தனை : இறைவன் தரும் மூன்று வழிகள்


தவக்காலப் பயணத்தில் இருக்கும் நமக்கு, இன்றைய நற்செய்தி தரும் மூன்று வழிகள் : கேட்பது, தேடுவது, தட்டுவது. கேட்பதில் எளிமையும், தேடுவதில் ஆழமும், தட்டுவதில் தொடர்ச்சியும், நமது கிறிஸ்தவ வாழ்வின் முப்பெரும் வழிமுறைகள். இந்த மூன்றுமே, நாம் இறைவனிடம் சரணாகதியாகிறோம் என்பதன் வெளிப்பாடு. கடந்து வந்த பாதை, புதிய மாற்றம் காண, இறை அருள் அடைய, இந்த முப்பெரும் வழிகள் நமக்கு உதவி புரிகின்றன. வெளிவேடம் இன்றி, சொற்களைக் குறைத்து, தாழ்ச்சியோடு கேட்கும் விண்ணப்பங்கள், இறை உறவை வலுவடைய செய்கின்றன. நம் வாழ்வு மாற, மனமாற்றம் காண, இறைவனிடம்  அருளை கேட்போம். நமது தேடல், இறைவனாக இருக்கட்டும். இறைவனின்  வழிகளில், மதிப்பீடுகளில், நமது வாழ்வு பயணிக்கட்டும். உண்மையான மனமார்ந்த, ஆழமான தேடல்கள், நமது பழக்க வழக்கங்களில், உறவு முறைகளில் அமையட்டும். தட்டுதல் என்பது, நமது முன் முயற்சி. பிறரன்போடு, சமூக அக்கறையோடு , நமது இல்லங்களும், பிறர் உள்ளங்களும், மகிழ, இந்த தவக்காலத்தில், முதன் முயற்சி எடுப்போம். ஆரம்பம் நம்மில் தொடங்கட்டும். இறைவழி நம்மிடையே. (அ.சகோ. இராசசேகரன் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.