2017-03-04 16:07:00

வாழ்வில் வெறுமையை அகற்றி, இறைவனோடு ஒப்புரவாகுங்கள்


மார்ச்,04,2017.  வாழ்வில் ஏற்படும் வெறுமையை நீக்கி, இறைவனோடு ஒப்புரவை உருவாக்கிக் கொள்வதற்கு, இத்தவக்காலத்தில் முயற்சிக்குமாறு, விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார், சிங்கப்பூர் திருஅவை தலைவர், பேராயர் வில்லியம் கோ (William Goh).

மார்ச்,01, இப்புதனன்று தொடங்கியுள்ள தவக்காலத்திற்கென மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள, சிங்கப்பூர் பேராயர் வில்லியம் கோ அவர்கள், தவறான நடவடிக்கைகளைக் கைவிட்டு, இறைவனிடம் மன்னிப்பை இறைஞ்சி, அவரோடு நல்லுறவில் வாழ்வது, அமைதி மற்றும், மகிழ்வை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

வாழ்வில் வெறுமையை உணர்தல், மோசமான நடவடிக்கைகளால் ஏற்படுவதாகும் என்றும், இந்நடவடிக்கைகள், நலவாழ்வை மட்டுமல்ல, அமைதி, மகிழ்வு மற்றும், சுதந்திரத்தையும், வாழ்விலிருந்து பறித்துக்கொள்ளும் என்றும் கூறியுள்ளார், பேராயர் கோ.

கிறிஸ்தவ சமூகம், இறையருளை அனுபவிக்க வேண்டியது இன்றியமையாதது எனவும், தவம், செபம், தர்மம் கொடுத்தல் ஆகிய மூன்றும், தவக்காலத்தின் தூண்கள் எனவும் கூறியுள்ளார், சிங்கப்பூர் பேராயர் கோ. 

ஆதாரம் : AsiaNews  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.