2017-03-03 14:30:00

தவக்காலச் சிந்தனை : ஏற்றுக்கொள்ளல்


ஒரு சிலருக்கு, இவ்வுலகில், தங்களைத் தவிர வேறு நல்லவர்களே இல்லை என்ற மனநிலை. தாங்கள் மட்டுமே எதையும் சரியாக செய்யமுடியும்  என்ற மனநோய். தங்களின் எண்ணம், சிந்தனை, செயல் மட்டுமே சிறப்பானவை என்ற மனமயக்கம். தங்களின் கருத்துதான் உயர்ந்தது, உண்மையானது என்ற மனச்செருக்கு. இத்தகைய தன்மை, பிறரை ஏற்றுக்கொள்ளும் தயக்கத்தை நம்மில் உருவாக்குகின்றது. இதனால்தான் ஒருவர் நமக்கு விருப்பம் இல்லாத வழியில் ஒரு செயலை செய்யும்பொழுது குறை கூறுகின்றோம். ஒருவர் நாம் விரும்பாத கருத்தினை கூறினால் அதனை மட்டம் தட்டுகின்றோம். இத்தகைய மனநிலை, இன்றய நற்செய்தியில், பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் விருந்துண்ணும் இயேசுவைக் குறைகூறும் பரிசேயர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றது. எனவே, பிறரிடம் குறை காண்பதை மட்டுமே குறிக்கோளாய் கொள்வதை தவிர்த்து, பிறரின் நிறைகளை பாராட்டவும், பிறரின் கருத்துகளிலும், செயல்களிலும் இருக்கும் நன்மையை உணரவும், முற்படுவோமா? (அ.சகோ. செலூக்காஸ் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.