2017-02-27 16:32:00

புனிதர் நிலை படிகளுக்கென 8 இறையடியார்களின் பெயர்கள்


பிப்.,27,2017. புனிதர் பட்டம் பெறுவதற்குத் தேவையான வழிமுறைகளுக்கு தகுந்தவர்களென எட்டு இறையடியார்களின் பெயர்களை இத்திங்களன்று, திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார், கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ.

1969ம் ஆண்டு தன் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட சலேசிய சபையின் இறையடியார் அருள்பணி Tito Zeman, மற்றும் தங்கள் வீரத்துவ பண்புகளுக்காக, சலேசிய சபையின் இறையடியார் ஆயர்  Ottavio Ortiz Arrieta, காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கென அன்னை மரியா பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கிய இறையடியார் அருள்பணி Antonio Provolo, இறைமீட்பர் அருள்கன்னியர் சபையை தோற்றுவித்த இறையடியார், இயேசு சபை அருள்பணி Antonio Repiso Martínez,  இயேசு கிறிஸ்துவின் திருஇதய மறைபோதக பணியாளர்கள் சபையை உருவாக்கிய இறையடியார் அருள்சகோதரி Maria della Mercede Cabezas Terrero, பிறரன்பின் அடிமைகள் அருள்சகோதரிகள் என்ற துறவு சபையின் இறையடியார், அருள்சகோதரி Lucia dell’Immacolata, 1978ல் இறையடி சேர்ந்த, பொதுநிலை விசுவாசி, இறையடியார் Pietro Herrero Rubio, 1998ல் மரணமடைந்த, குடும்பத்தலைவர், இறையடியார் Vittorio Trancanelli ஆகியோரின் பெயர்கள், புனிதர் பட்ட நிலைக்கென திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.