2017-02-27 16:50:00

நாம் விழும்போது நம்மை தூக்கி விடுகின்றன‌ இறைகரங்கள்


பிப்.,27,2017. “நிச்சயமற்றதாக அமையும் நம் பயணத்தில், நாம் வீழும்போது, இரக்கத்தின் வள்ளலாக இருக்கும் இறைவன், தன் கைகளை நீட்டி நம்மை தூக்கி விடுவார்” என, தன் டுவிட்டர் பக்கத்தில் திங்களன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், வத்திக்கான் நாடு வெளியிடும் யூரோ நாணயங்களில் இனிமேல் தன் உருவம் பொறிக்கப்படக்கூடாது என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள விருப்பம் முற்றிலுமாக மதிக்கப்படும் என தெரிவித்துள்ளார், வத்திக்கான் தபால்துறை மற்றும் நாணயம் வெளியிடும்  துறையின் தலைவர், Mauro Olivieri.

2002ம் ஆண்டிலிருந்து யூரோ நாணயங்களை அச்சிட்டு, வெளியிட்டு வரும் வத்திக்கான் நாடு, தற்போதிலிருந்து திருத்தந்தையின் உருவம் பொறிக்கப்படாத நாணயங்களை அச்சிட உள்ளது.

தனி மனித வழிபாடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ள இந்த விருப்பம், வரவேற்கப்படக்கூடியதே என்றார் Olivieri.

ஏற்கனவே 1975ம் ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும், இத்தகைய விருப்பத்தை வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார் Olivieri.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.