2017-02-20 16:38:00

அப்பாவி மக்களின் வலியை என்னால் உணர முடிகிறது


பிப்.20,2017. இன்றைய உலகில் பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளுக்குப் பலியாகும் மக்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வுலகில் வன்முறைக்குப் பலியாகும் மக்கள் குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை, காங்கோ ஜனநாயக குடியரசின் மத்திய கசாய் பகுதியில் இடம்பெறும் மோதல்களால் பலியாகும் அப்பாவி மக்களின் வலியை தன்னால் உணரமுடிகிறது என்று கூறினார்.

தங்கள் குடும்பங்களில் இருந்தும், கல்வி நிலையங்களிலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்டு, சிறார் இராணுவ வீரர்களாக நடத்தப்படும் பாலகர்கள் குறித்து ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் துன்ப நிலைகளை அகற்ற, நாடுகள் மற்றும் அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆப்ரிக்காவில் வன்முறைகளால் துன்புறும் மக்களுக்காக செபிக்கும் அதேவேளை,  அண்மை நாட்களில் வன்முறை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் ஈராக் நாட்டு மக்களையும் நம் செபங்களில் நினைவுகூர்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.