2017-02-08 17:08:00

காலித் தட்டுகளை முரசுகளாக்கி, கிராமப் பெண்கள் போராட்டம்


பிப்.08,2017. வேலையும், உணவும் தேவை என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான பெண்கள், இந்தியாவின் மேற்கு வங்க மாநில கிராமங்களில் போராட்டங்களை மேற்கொண்டனர் என்று UCAN செய்தி கூறுகிறது.

பிப்ரவரி 8, 9 ஆகிய நாட்கள் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், கிராமப் பெண்கள், காலித் தட்டுகளை முரசுகள் போல் பயன்படுத்தி, ஒலியெழுப்பி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இயேசு சபையினரின் சமுதாயப் பணிக்குழுவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் போராட்டம், அண்மையில், இந்திய அரசு வெளியிட்ட வரவு, செலவு திட்டத்தை வன்மையாகக் கண்டனம் செய்தது என்று UCAN செய்தி மேலும் கூறுகிறது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள வரவு, செலவு திட்டம், வறியோரை, குறிப்பாக, கிராமங்களில் வாழும் வறியோரை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் வரையப்பட்டுள்ள ஒரு திட்டம் என்று, இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த இயேசு சபை அருள்பணி இருதய ஜோதி அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.