2017-02-03 16:06:00

நிலநடுக்கத்தால் பாதிப்படைந்தோர்க்கு வத்திக்கான் அங்காடி உதவி


பிப்.,03,2017. இத்தாலியில் அண்மை நில நடுக்கங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உருவான விவசாயப் பொருட்களை விற்பனை செய்வதன் வழியாக, அப்பகுதிக்கு உதவ முன்வந்துள்ளது, வத்திக்கான் நாட்டு பல்பொருள் அங்காடி.

வத்திக்கான் நாட்டில் வேலை செய்பவர்களுக்கு என நடத்தப்படும் பல்பொருள் அங்காடியில், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின், குறிப்பாக, அமாத்ரிச்சே நகரின் விவசாய உற்பத்திப் பொருட்களை விற்க முடிவெடுத்துள்ளது, வத்திக்கான் நாடு.

ஏற்கனவே, வத்திக்கான் நாடு, நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இத்தாலியப் பகுதிகளுக்கு, தன் தீயணைப்பு படையினரையும், காவல்துறையையும், மருத்துவப் பணியாளர்களையும் அனுப்பி உதவியுள்ளது.  

மேலும், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பகுதி ஆலயங்களில் உள்ள கலை வேலைப்பாடுகள் சேதமடைந்திருந்தால், அவற்றைச் சீரமைக்கும் பணியில் உதவ, வத்திக்கான் அருங்காட்சியகமும் முன்வந்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, பாதிக்கப்பட்ட நகரங்களுக்குச் சென்று பார்வையிட்டுத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.