2017-01-27 16:19:00

எல்லைச் சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆயருக்கு பாராட்டு


சன.27,2017. திருஅவைக்குச் சொந்தமான நிலத்தில், எல்லைச் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த, ஆஸ்ட்ரிய கத்தோலிக்க ஆயர் Ägidius Zsifkovics அவர்களைப் பாராட்டி, தனது நன்றியைத் தெரிவித்துள்ளது, UNHCR என்ற ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனம்.

UNHCR நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலம்பெயர்ந்தோரைத் தடை செய்வதற்காக, திருஅவைக்குச் சொந்தமான நிலத்தில், கட்டப்படவிருந்த சுவருக்கு, ஆயர் அவர்கள், எதிர்ப்பு தெரிவித்ததால், ஆஸ்ட்ரிய அரசு, தன் எல்லைப் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது எனக் கூறியுள்ளது.

ஆஸ்ட்ரியாவின் Eisenstadt மறைமாவட்ட ஆயர் Zsifkovics அவர்கள் எடுத்த, நன்னெறி சார்ந்த நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ளது UNHCR நிறுவனம்.

மேலும், தனது நிலைப்பாடு குறித்துப் பேசிய, ஆயர் Zsifkovics அவர்கள், உதவித் தேவைப்படுபவர்க்கு உதவ வேண்டுமென்பது, நம் ஆண்டவரிடமிருந்து நேரிடையாகப் பெற்ற பணியாகும் எனத் தெரிவித்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.