2017-01-26 15:31:00

திருத்தந்தையுடன் ஒன்றிப்பு பயணத்தில் பங்கேற்போம்


சன.26,2017. கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நிகழ்வான மாலை வழிபாட்டினை தலைமையேற்று நடத்த வந்திருந்த திருத்தந்தைக்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் அவர்கள் தன் நன்றியை தெரிவித்தார்.

"கிறிஸ்துவின் பேரன்பே நம்மை ஒப்புரவை நோக்கி உந்தித் தள்ளுகிறது" என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைக் குறிப்பிட்ட கர்தினால் கோக் அவர்கள், இந்த மையக்கருத்து, சீர்திருத்த சபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார்.

லூத்தரன் சீர்திருத்த இயக்கம் துவங்கப்பட்டு 500 ஆண்டுகள் நிறைவுற்றதை, கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து கொண்டாடுவது, நம்மிடையே வளர்ந்துவரும் ஒன்றிப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று, கர்தினால் கோக் அவர்கள் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பினை தன் தலைமைப் பணியில் முக்கியமான குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, அனைவரும் இந்த ஒன்றிப்பு பயணத்தில் பங்கேற்போம் என்று, கர்தினால் கோக் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.