சன.25,2017. மைசூர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த ஆயர் தாமஸ் ஆன்டனி வாழப்பில்லி அவர்கள் பணி ஒய்வு பெற விழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று ஏற்றுக்கொண்டார்.
மைசூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி கன்னிகதாஸ் வில்லியம் ஆன்டனி (Kannikadass William Antony) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இப்புதனன்று நியமித்தார்.
அருள்பணி வில்லியம் ஆன்டனி அவர்கள், புனித யோசேப்பு ஆலயத்தின் பங்கு அருள்பணியாளராகவும், அம்மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியவர்.
76 வயது நிறைந்த ஆயர், வாழப்பில்லி அவர்கள், 2003ம் ஆண்டு முதல், மைசூர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றியவர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |