2017-01-14 15:22:00

அருள்பணியாளர் டாம் விடுதலைக்காக இந்தியர்கள் செபம்


சன.14,2017. ஏமனில் கடத்தப்பட்டுள்ள இந்திய அருள்பணியாளரின் விடுதலைக்காக, இந்தியக் கத்தோலிக்கர்கள் தொடர்ந்து செபித்து வருகின்றனர் என்று UCA செய்தி நிறுவனம் கூறுகின்றது.

58 வயது நிரம்பிய, கேரளாவைச் சேர்ந்த, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி, ஏடனில், பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் முதியோர் இல்லத்திலிருந்து, இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

கேரளாவின் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் 57 ஆயர்களும் இணைந்து, கொச்சி புனித மரியா பசிலிக்காவில், திருப்பலி நிறைவேற்றி, அருள்பணியாளர் டாம் அவர்களின் விடுதலைக்காகச் செபித்தனர்.

திருப்பலியின் போது, இதே கருத்துக்காக, தினமும் செபிக்கும் செபம் ஒன்றையும் ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும், அருள்பணியாளர் டாம் அவர்களின் விடுதலைக்காக, இந்திய அரசு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து, செயல்பட்டு வருகிறது என்று, இத்திருப்பலியில் விசுவாசிகளுக்கு அறிவித்தார், கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.