2017-01-11 16:48:00

நூற்றுக்கும் அதிகமான வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன


சன.11,2017. ஈராக் நாட்டில், 2014ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து, இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் அடிப்படைவாத குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த நினிவே சமவெளி பகுதியில், நூற்றுக்கும் அதிகமான வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் உள்ளன என்று கூறும் அறிக்கையொன்று அண்மையில் வெளியானது.

Daesh இஸ்லாமிய அரசு என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் இந்த வன்முறைக் குழுவினரால் அழிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் பெரும்பாலானவை, கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் என்றும், Yazidi எனப்படும் சிறுபான்மை இனத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் ஒரு சில என்றும் பீதேஸ் (Fides) செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஈராக்-குர்திஸ்தான் சுயஆட்சிப் பகுதியைச் சார்ந்த இந்த அறிக்கையில், வழிபாட்டுத் தலங்களின் அழிவு குறித்து மட்டுமல்லாமல், அப்பகுதியில் வாழ்ந்தவர்கள், குறிப்பாக, பெண்கள் அடைந்த துயரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.